சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவேரி மருத்துவமனை விரைந்துள்ளனர்.
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவேரி மருத்துவமனை விரைந்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சை பிரிவில், 8 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், காவரி மருத்துவமனையும் அவரது உடல்நலம் குறித்து தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்றிரவு வெளியிடப்பட்ட 4-வது அறிக்கையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது, சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சேலத்தில் இன்று பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று நள்ளிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவேரி மருத்துவமனை விரைந்துள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சிவி சண்முகம் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக ஏற்கனவே அங்கு தொண்டர்கள் குவிந்து உள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது