காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ள தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு, தற்போது சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே,கழக தொண்டர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமலும் அமைதி காக்க வேண்டும். அதே போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.