சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வீட்டின் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடையாறு கற்பகம் அவென்யூ பகுதியில் டி.டி.வி. தினகரன் வசித்து வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கப்பட்ட பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கி அதன் துணை பொதுச் செயலாளராக உள்ளார்.
அக்கட்சிக்கு தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களையும் அவர் நியமித்துள்ளார். அவர்கள் தினகரனை சந்திப்பதற்காக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு தினமும் வருகிறார்கள். இதனால் தினகரன் வீடு இருக்கும் பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
இந்த நிலையில் இன்று காலை டி.டி.வி.தினகரன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் காரின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டு முன்பு நின்றிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.
இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சேதமடைந்த கார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இவரை கட்சி பொறுப்பில் இருந்து சமீபத்தில் தினகரன் நீக்கியிருந்தார். அந்த பதவிக்கு உமா மகேஷ்வரி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தினகரன் வீட்டு அருகே புல்லட் பரிமளம் காரில் குண்டு வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் வீட்டு மீது குண்டு எறிய முற்பட்டபோது, காரிலேயே குண்டு வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே புல்லட் பரிமளத்தின் கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். புல்லட் பரிமளத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.