நீலகிரி: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு இன்று உதகையில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு புலியின் அவசியம் குறித்து காணொளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்த புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்தது. இதனையடுத்து புலிகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் உலக புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி, இன்று உதகை கேர்ன்ஹில் வனப்பகுதியில் மாவட்ட வனத்துறை சார்பில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் புலிகளின் அவசியம் குறித்தும், புலி வனத்தில் ஏன் இருக்க வேண்டும்? என்பதை உணர்த்தும் வகையில் காணொளி காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் 2,226 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நீலகிரியில் 120 முதல் 130 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தகவல் உள்ளதாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.