திருப்பூர்: தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது என்பது உண்மை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீப காலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக செயின் பறிப்பு, கொலை, பாலியல் வன் கொடுமை ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அரசு அவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதனை தவறு என்று சொல்லிவிட முடியாது. அதே சூழ்நிலையில், தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவிவருகிறது என்பது உண்மை.
இந்தியாவின் முதுபெரும் தலைவரும், தி.மு.க.,வின் தலைவருமான கருணாநிதி உடல்நிலை தேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பூரண நலமடைந்து திரும்பி வர வேண்டும் என்று த.மா.கா., விரும்புகிறது. உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை மாநில அரசு கட்டாயம் குறைத்திட வேண்டும். ஜி.எஸ்.டி., நூல் விலை உயர்வு ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்தாததால் பின்னலாடை துறை சரிவடைந்து வருகிறது." என்றார்.