உடுமலை: மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்த தி.மு.க., தொண்டர், கட்சியின் தலைவரான கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாமல் போனதை நினைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்.
உடுமலை: மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்த தி.மு.க., தொண்டர், கட்சியின் தலைவரான கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாமல் போனதை நினைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சபரிகிரிநாதன் என்கின்ற செந்தில் (42). இவர் பாப்பான்குளம் ஊராட்சியின் 5-வது வார்டு தி.மு.க., பகுதி செயலாளராக இருந்தார்.

திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரை பற்றிய கவலையில் ஆழ்ந்துள்ளார் செந்தில். மேலும், வீட்டில் தனது தலைவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்று தனது மனைவியிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு, கட்சித் தொண்டகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.