வால்பாறையில் கோவிலில் அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணம் திருட்டு

கோவை: வால்பாறையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டைத் திறந்து நேற்று இரவு உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மனுக்கு அணிவித்திருந்த தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

மேலும், கோவிலின் அருகே உள்ள ஹோமியோபதி கிளினிக்-க்குள் புகுந்து அங்கிருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் கோவில் பூசாரி வந்து பார்க்கும் போது, இக்கொள்ளைச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.



இது தொடர்பாக, வால்பாறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு சென்ற போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளைப் பார்வையிட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த, காமிராவில் அங்கு இரண்டு சிறுத்தை புலிகள் நடமாடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...