கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நேற்று முன்தினத்தில் இருந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு மீண்டும் அவரது உடல்நிலை மோசமானதால், ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரத்த அழுத்தக் குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது. 



இந்த நிலையில், காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் மருந்துகளின் உதவியால், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில், அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...