கருணாநிதியின் உடல்நலம்தேறி வரும் தகவல் மனநிறைவை அளிக்கிறது: உடுமலையில் ஜி.கே. வாசன் பேட்டி

திருப்பூர்: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாக வெளியாகும் தகவல் மனநிறைவை அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாக வெளியாகும் தகவல் மனநிறைவை அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் உடுமலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி,உடுமலைப் பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிர்வாகிகள் பணியாற்றுமாறு அவர் உத்தரவிட்டார். 



இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது :- தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக வரும் தகவல் மனநிறைவைத் தருகிறது. மேலும், பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை என்பது ஆபரேசன் சக்சஸ் நோயாளி இறந்து விட்டார் என்பது போல் உள்ளது. நகராட்சி பகுதிகளில் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...