நீலகிரி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு உதகை நகராட்சி ரூ. 22,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக்கை கொண்டுள்ள டம்ளர், தட்டுகள் போன்றவற்றிற்கு தடை செய்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதனால், மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வியாபார நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து சோதனை நடத்தி, அபராதம் விதித்து வந்தது.
இந்நிலையில், உதகை நகரில் இன்று நகராட்சி ஆணையாளர் ரவி (பொறுப்பு) தலைமையில் அதிகாரிகள் பிளாஸ்டிக் தடுப்பு சோதனையை நடத்தினர். அப்போது, இதில், பல வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தடையை மீறி பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இன்று நடைபெற்ற இந்த சோதனையில் சுமார் ரூ. 22,000 அபராதம் வசூலிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்.