கோவையில் குடிபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர் கைது ; தவறை ஒப்புக் கொண்டு வீடியோ வெளியீடு

கோவை: காந்திபுரம் ஆம்னி பேருந்துநிலையம் அருகே போக்குவரத்து காவலர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், தனது தவறை ஒப்புக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கோவை: காந்திபுரம் ஆம்னி பேருந்துநிலையம் அருகே போக்குவரத்து காவலர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், தனது தவறை ஒப்புக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 



வடவள்ளி விஜயாநகரைச் சேர்ந்த ஜெகதீசனின் மகன் சுதர்சன் (28). இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, போலீசார் வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது, சுதர்சன் குடிபோதையில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதத்தை செலுத்திவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால், குடிபோதையில் இருந்த அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பொது இடத்தில் வைத்து போலீசாரை தரக்குறைவாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியுள்ளார். இதனால், இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரிச்சர்டு, சட்டம், ஒழுங்கு காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர், வந்த இரத்தினபுரி போலீசார் குடிபோதையில் இருந்த சுதர்சனை கைது செய்து, அவர் மீது அரசு அலுவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி செல்லுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 



இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள இளைஞர் சுதர்சன் "தான் மது போதையில் காவல்துறையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பொதுமக்கள் கைதட்டியதால் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் மன்னிப்பு கேட்டுள்ளார்". அதேபோல, அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...