கருணாநிதிக்கு மருத்துவ உதவி வழங்க அரசு தயார்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கோரப்பட்டால், அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கோரப்பட்டால், அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதால், அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது ரத்த அழுத்தம் சீரடைந்து உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி உடல்நலம் தேர வேண்டும் என தி.மு.க., தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கோரப்பட்டால், அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், "காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி குணமடைந்து வருகிறார். மருத்துவ உதவி கேட்டால், அரசு உதவ தயாராக இருக்கிறோம். நீட் தேவையில்லை என்பதே தமிழக அரசின் கருத்து. எனினும், உச்சநீதிமன்ற தீர்ப்பால் நீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார். 

இதனிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி விளக்கம் அளித்திருப்பதாவது :- கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தக் குறைவு தற்போது சீராகி விட்டது. நேற்று இரவு ரத்த அழுத்தம் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இன்று அது இயல்பு நிலைக்கு வந்துள்ளது. தற்போது கருணாநிதி நலமாக உள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள், என்றார். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...