தி.மு.க., தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. கருணாநிதி உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி நலமாக உள்ளதாக தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது :- தமிழின தலைவர் கலைஞருக்கு திடீரென ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் நலமாக உள்ளார். இதுகுறித்து மருத்துவமனை குழுவினர் அறிக்கை அளிக்க உள்ளனர். எனவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.