தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து நடத்த அதிகாரிகளுடன் பேச்சு: வேதாந்தா தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் காப்பர் உருக்காலையை மீண்டும் திறந்து நடத்துவதற்காக விரைந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஸ்டெர்லைட் ஆலையின் அன்னை நிறுவனமாகிய வேதாந்தா லிமிடெட் அறிவித்துள்ளது.


தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் காப்பர் உருக்காலையை மீண்டும் திறந்து நடத்துவதற்காக விரைந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஸ்டெர்லைட் ஆலையின் அன்னை நிறுவனமாகிய வேதாந்தா லிமிடெட் அறிவித்துள்ளது.



தூத்துக்குடி தாமிர உருக்காலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது.



துவக்கத்தில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில அரசு உத்தரவுகள் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டதாக வேதாந்தா நிறுவனம் தன்னுடைய 2017-18 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து நடத்த சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை துவக்கி இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.



தமிழக அரசின் நிரந்தர மூடல் ஆணைக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீட்டு மனுவின் மீது கருத்து கூறும்படி தமிழக அரசுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை அனுப்பி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் புதுப்பிக்க தாக்கல் செய்த மனுவை நிராகரித்து விட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் 28 ஆம் தேதி மாநில அரசு நிரந்தர மூடல் ஆணையை வெளியிட்டது. ஆலை விரிவாக்க பணிகளுக்காக வழங்கிய நில ஒதுக்கீட்டையும் தமிழக அரசு ரத்து செய்தது.

அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது.

உருக்கு கம்பிகள்

இந்தியாவில் மின்துறைக்கு தேவையான இரும்பு, உருக்கு பொருள்களுக்கு பெரும் தேவை உள்ளது. அதற்கான சந்தை வாய்ப்புகளும் சிறப்பாக உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் இரும்பு தாது பெருமளவில் கிடைக்கிறது. அதனை தொழில்முறைப்படுத்தி தேவைக்கேற்ப இரும்பு உருக்கு வகைகளாக உற்பத்தி செய்யலாம் என வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...