கோவை: எட்டாவது நாளாக நீடித்த லாரி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது.
கோவை: எட்டாவது நாளாக நீடித்த லாரி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது.
டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டனம் உயர்வு, இன்சூரன்ஸ் விலை உயர்வு போன்றவற்றை குறைக்க கோரியும், முறைப்படுத்த கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் ஜுலை 20 முதல் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன் பாடு ஏற்பட்டதை அடுத்து லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டது.
இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறுகையில், "வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது," என்றார்.