கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவரது கோபாலபுரம் வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திமுக தலைவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் ஊசி மூலம் நரம்பின் வழியாக செலுத்தப்பட்டு வருகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவக்குழு கவனித்துக் கொள்கிறது. மருத்துவ வசதிகள் அனைத்தும் வீட்டிலேயே செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் நேரில் பார்க்க வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...