திருப்பூர்: நொய்யல் ஆற்றில் மண் சரிவை தடுக்கும் வகையில் சுவர், நடைபாதை உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

நொய்யல் நதியினை சீரமைக்க தமிழக அரசு 150 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், அதன் தூய்மைப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- நொய்யலாற்றில் இனி கழிவுகள் தடுக்காதவாறு தடுப்புச்சுவர் எழுப்பி, தண்ணீரை சுத்தம் செய்து அதனை ஒரத்துப்பாளையம் அணையில் சேகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் செயல்திட்டம் வகுக்கப்படும். ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நொய்யலாற்றில் மண் சரிந்து போகாதவாறு சுவர், நடைபாதை, சாலை ஆகியவை அமைக்கப்படும்.
வீட்டுக்கழிவுகள், சில்வர் பிளேட் சுத்தம் செய்யும் கழிவுநீர் ஆகியவையே நொய்யலாற்றில் கலக்கின்றன. அவையும் கலக்காதவாறு சுத்தம் செய்து சேமிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது, நொய்யலாற்றின் டி.டி.எஸ் (TDS) அளவு 1000-க்கும் கீழ் குறைந்துள்ளது, எனக் கூறினார்.

மேலும், இயற்கை மருத்துவம் என்ற பெயரில் யூடியூப் பார்த்து பிரசவம் பார்க்கப்பட்ட பெண் பலியான சம்பவம் குறித்து கேட்டபோது, "சுகாதாரத்துறைக்கென அரசு பல செயல்திட்டங்கள் செய்து செலவு செய்து வரும் நிலையில், அதனை தெரிந்துகொள்ளாத சிலர் செய்யும் தவறுகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.