மேட்டுப்பாளையத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து ஒத்திகை

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து தீயணைப்புத் துறை சார்பில் மேட்டுப்பாளையத்தில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து தீயணைப்புத் துறை சார்பில் மேட்டுப்பாளையத்தில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்ட பகுதிகளிலும், மேட்டுப்பாளையம், கல்லார் போன்ற இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.



 

இதனையடுத்து பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு வருவதுடன் பில்லூர் அணை இரண்டு முறை நிரம்பியதை அடுத்து உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றின் நீர்த் தேக்க பகுதியில் ஒன்பதாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதுடன் கந்தையாற்றின் குருக்கே கட்டப்பட்ட உயர் மட்ட பாலமும் நீரில் மூழ்கி நான்கு மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீட்புப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் நடத்தப்பட்ட இந்த மீட்பு ஒத்திகையில் வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை பரிசல் கொண்டு காப்பாற்றுவது மற்றும் ரப்பர் போட்டு, கயிறு கட்டி மீட்பது போன்ற ஒத்திகைகள் நடத்தப்பட்டன.



நிலைய அதிகாரி முருகேசன் தலைமையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த ஒத்திகையில் கலந்து கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தத்ரூபமாக செய்து காண்பித்ததுடன், மீட்கப்பட்டவர்களுக்கான முதலுதவி ஆகியவற்றையும் பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...