கோவை: மேட்டுப்பாளையம் - குன்னுார் - உதகை இடையே நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 'யுனெஸ்கோ' அங்கீகாரம் பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்ய, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கடந்தாண்டு சுமார் 25 லட்சம் பேர் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். மலை ரயிலில் கோடை காலத்தில் பயணிக்க முன்பதிவு முழுவதும் முடிந்த நிலையில், பலருக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.

செலவு அதிகம்
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா 2017-18-ல் நீலகிரி மலை ரயில் ரூ.26 கோடி நஷ்டத்தில் இயங்கியதாக தெரிவித்தார். மேலும், கடந்த 2016-17-ல் ரூ.1.99 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், ரயிலுக்கு ரூ.26.74 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2017-18-ல் ரூ.1.82 கோடி வருவாய் கிடைத்த நிலையில், ரூ.28 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது என்றார்.
தற்போது இந்த ரயிலில் முதல் வகுப்பு கட்டணமாக ரூ.195 ரூபாய், இரண்டாம் வகுப்புக்கு ரூ.30 வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், உதகை - குன்னுார் இடையே பயணம் செய்ய ரூ.10 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் மலை ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட கட்டணம் அமலுக்கு வருகிறது.
உயர்வு
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் (வர்த்தகம்) கே.மது இது தொடர்பாக விடுத்துள்ள சுற்றறிக்கையில், "நீலகிரி மலை ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை முதல் வகுப்பு கட்டணம் ரூ.195-லிருந்து, ரூ.395-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு (முன்பதிவு) ரூ.30-லிருந்து ரூ.130-ஆகவும், இரண்டாம் வகுப்பு (முன்பதிவற்றது) ரூ.15-லிருந்து ரூ.75-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ.174-லிருந்து ரூ.295-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு (முன்பதிவு) கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.85-ஆகவும், இரண்டாம் வகுப்பு (முன்பதிவற்றது) ரூ.10-லிருந்து ரூ.45-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு காரணமாக நீலகிரி சுற்றுலா பாதிக்காது என ரயில் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.