முத்தையா முரளிதரன் சுழற்பந்தை சந்திப்பது கடினமானதாக இருந்தது : முன்னாள் ஆஸி., வீரர் மைக் ஹசி கோவையில் பேச்சு

கோவை: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் கோவை வந்திருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக் ஹசி நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிக்கு வருகை புரிந்தார்.


கோவை: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் கோவை வந்திருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக் ஹசி நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிக்கு வருகை புரிந்தார்.

அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அப்பள்ளி மாணவர்களின் பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை மைக் ஹசி பார்வையிட்டு ரசித்தார்.



பின்னர் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சுழற்பந்தை சந்திப்பது தான் மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், அவர் பந்தை வீசும் போது கண்களை உருட்டி பந்து வீசுவார் என்றும் தெரிவித்தார். பந்து அவரது விரல்களில் மாயாஜாலம் காட்டும் என்றார்.



"உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் வேடிக்கையான தருணம் எது?" என்ற மாணவர்களின் கேள்விக்கு, "எம்.சி.ஜி. மைதானத்தில் தென் ஆப்பிரிகவிற்கு எதிரான போட்டியில் டெயில் ஸ்டெயின் பந்தை உயரத் தூக்கி அடிக்க பவுண்டரி லைன் அருகில் நின்றிருந்த நான் அதைப் பிடிக்க முயன்றேன். ஆனால், வெயிலின் காரணமாக பந்தை பிடிக்க முடியவில்லை. மேலும், பந்து எனது கால் அருகே விழுந்தது.

ஓய்வறையில் இந்த பதிவை பார்த்து சக வீரர்கள் கிண்டலடித்தது வேடிக்கையான தருணமாக இருந்தது." என்றார்.



உங்களின் முன்னேற்றதிற்கு யார் காரணம் என்ற கேள்விக்கு, என்னை கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்திய தனது தாய், தந்தை தனது பயிற்சியாளர், நண்பர்கள் என பலர் இருப்பினும் நீண்ட காலமாக தன்னுடன் விளையாடிய வீரர்கள் தான் தனது முனேற்றதிற்கு முக்கிய காரணம் என்றார்.

பின்னர் மாணவர்களுக்கு தனது கையொப்பமிட்ட தொப்பிகளை வழங்கினார். பின்னர் அங்கிருந்து கலை அறிவியல் கல்லூரிக்கு சென்று மாணவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் எஸ்.என்.ஆர் கிரிக்கெட் மைதானத்தில் 16 வயதிற்கு உட்பட்ட வீரர்களுடன் கிரிக்கெட் தொடர்பான நுட்பங்கள் குறித்து விளக்கினார்.



இதன் பின்னர் ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்ற அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பேசினார். நாளை காலை புறவழி சாலையில் அமைந்துள்ள சக்தி தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களைச் சந்திக்க உள்ளார்.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...