போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி கைதியை கடத்திச் சென்ற சம்பவம்: 3 பேர் கைது

கோவை: கோவை - அவினாசி சாலையில் உள்ள கணியூர் அருகே கேரள போலீசாரை தாக்கிவிட்டு, கைதியை கடத்திச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை - அவினாசி சாலையில் உள்ள கணியூர் அருகே கேரள போலீசாரை தாக்கிவிட்டு, கைதியை கடத்திச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் மகாராஜன் (43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பள்ளந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர், தனது விலையுயர்ந்த காரை அடகு வைத்து, 45 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. வாங்கியப் பணத்தை ஜேக்கப் திருப்பி கொடுத்த பிறகும், மகாராஜன் காரை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது தொடர்பாக ஜேக்கப் அளித்த புகாரின் பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசார் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைத்து மகாராஜனை கைது செய்து கேரளாவிற்கு காரில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் டோல்கேட் அருகே கார் வந்த போது, அங்கு தயாராக இருந்த சுமார் 30 பேர் கொண்ட மர்ம கும்பல் கேரள போலீசாரை தாக்கிவிட்டு அந்த காரிலிருந்த மகாராஜனை கடத்திச் சென்றனர்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக பாலக்காடு காவல் உதவி கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட கேரள போலீசார், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட போலீசார் இந்தக் கடத்தல் விவகாரத்தை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அதேபோல, மர்ம கும்பலில் உள்ளவர்களின் அடையாளங்களை சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவாகியதை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணி செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில், கோவை தடாகத்தில் வேலை செய்து வரும் இளவரசன் (23), ஓட்டுநர் பணி செய்து வரும் விக்னேஸ்வரன் (23), கவுண்டம்பாளையம் பகுதியில் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வரும் வேல்முத்து (21) ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி அருகே உள்ள சாத்தான்குளம் பகுதியிலுள்ள படுக்கப்பத்து என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள்.

இந்த மூன்று பேரை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தக் கைது நடவடிக்கை குறித்து கோவை மாவட்ட போலீசார், கேரள போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...