கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீபிரியா என்ற பெண்ணை திடீரென போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீபிரியா என்ற பெண்ணை திடீரென போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் ஸ்ரீனிவாசன்(45). இவரது மனைவி ஸ்ரீபிரியா (42). மகேஷ் ஸ்ரீனிவாசன் பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு குடும்பத்தை விட்டுவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத காரணத்தால் இவரது குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல்களும் காவல் துறையினரால் கைது நடவடிக்கைகளும் நடப்பதாக கூறப்படுகிறது.
இதில் கடந்த ஜூன் மாதம் முத்து கிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஸ்ரீபிரியாவை கைது செய்தனர். பின்னர் விசாரணை செய்து விட்டு விட்டதாகவும், மீண்டும் போலீசார் கைது நடவடிக்கைக்கு தயாராகும் போது அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீபிரியாவுக்கு எதிரான வழக்கை போலீசார் முடித்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தசூழலில், இன்று காலை சுமார் ஏழு மணிக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஸ்ரீப்ரியாவையும் அவரது ஓட்டுநர் குமாரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவிலுக்குள் இருந்த பெண்ணை திடீரென போலீசார் கைது செய்த சம்பவம் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.