கோவை : லாரிகளின் தொடர் வேலை நிறுத்தத்தால் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால், வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிந்தியாவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகம் முக்கியமானது. நீலகிரி மாவட்டம் கர்நாடகா, குஜராத், ஆக்ரா, நைனிடால், இந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100 முதல் 120 லோடு உருளை கிழங்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட கிழங்கு மண்டிகளில் தொழிலாளர்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு 45 கிலோ மூட்டைகளாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது, கடந்த ஜந்து நாட்களாக தொடர்ந்து நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கிழங்கு வரத்து தடைபட்டுள்ளது. ஏற்கனவே, கொண்டுவரப்பட்ட உருளை கிழங்குகளும் விற்று தீர்ந்த நிலையில், ஒரு கிலோ கிழங்கு விலை ரூ. 5 வரை உயர்ந்துள்ளது. மேலும், நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழங்கு மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்
இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் நிலைமை மோசமாக பாதிக்கப்படும் என்பதால் மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.