ரூ. 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வழங்கினார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. 

இந்த முகாமில் வருவாய்துறை சமூகநலன் மற்றும் கல்வி வேளாண்மைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கல்வி உதவி தொகை, விதவை உதவி தொகை மற்றும் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, விவசாயிகளுக்கு சோலார் மின் மோட்டார்கள் என மொத்தம் ரூ. 43,34,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முகாமில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



"அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை உரிய முறையில் தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழாத வகையில், தொடர்ந்து தாலுகா வாரியாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படும்," என்றார் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...