உதகையில் மின்சாரம் தாக்கி தோடர் இன மக்களின் எருமை பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள சாலைகளில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, எருமை, குதிரை போன்ற கால்நடைகள் உலா வருவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள சாலைகளில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, எருமை, குதிரை போன்ற கால்நடைகள் உலா வருவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனாலும் கால்நடைகள் சாலைகளில் சுற்றி வருவதைத் தடுக்க முடியாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு டோக்கன் போடப்பட்டு நகராட்சியில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இது வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராட்டன் டாட்டா சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தோடர் இன மக்கள் வளர்க்கும் எருமை என்று மின்சாரம் பாய்ந்து பலியானது. இந்த சூழலில், சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததுள்ளது.



மேலும், இந்த சாலையானது, பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக இருப்பதால் அந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...