திருப்பூர்: தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருப்பூரில் பெண் ஒருவரை பள்ளியில் சமையல் செய்ய அனுமதிக்காதது தொடர்பாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவிநாசியை அடுத்த திருமலைக் கவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் தலித் என்பதால், பள்ளியில் அவர் சமையல் செய்யக்கூடாது என்று ஒரு சாதி பிரிவினர் கடந்த 18-ம் தேதி பள்ளியில் நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, உள்ளூர் ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்கு அடிபணிந்த அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சமையலர் பாப்பாளை வேறு ஊருக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால், தான் இதே பள்ளியில் தான் பணியாற்றுவேன் என்று பாப்பாள் கூறினார்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி ஆகியோருக்கு தேசிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சம்மன் அனுப்பியது.
அவர்கள் மூவரையும் வரும் 30-ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைமையகத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணை தலைவர் முருகன் முன் நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில், சமையலர் பாப்பாளிடம் சாதிய அடக்கு முறை செய்த 12 பேர் மற்றும் அடையாளம் தெரியக்கூடிய வகையில் உள்ள 75 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இதில், கந்தசாமி (47), மூர்த்தி (27), பழனிச்சாமி (39), மூர்த்தி (47), பழனிசாமி (60), ஏழூர் சக்திவேல் (40), சண்முகம் (42) ஆகிய ஏழு பேரை சேயூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.