கோவை வழியாக கேரளாவுக்கு குட்கா பொருட்கள் கடத்த முயன்ற இருவர் கைது

கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவரை கந்தன்சாவடி போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவரை கந்தன்சாவடி போலீசார் கைது செய்தனர்.



கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவை சேர்ந்தவர்கள் விபின் (30) மற்றும் ரியாஸ் (33). இவர்கள் பெங்களூரில் இருந்து பான் மசாலா குட்கா போன்ற பொருட்களை வாங்கி அவற்றை கோவை வழியாக கேரளா கொண்டு செல்ல முயன்றனர்.

அவர்களது கார் வாளையார் அருகே சென்ற போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தடை செய்யப்பட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ற காரில் இருந்த 150 கிலோ குட்கா பொருட்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.



இது தொடர்பாக, வழக்குத் தொடுக்க இருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் பான் மசாலா பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...