நடப்பாண்டில் வருமான வரி 27 சதவிதிகம் அதிகரிப்பு : கோவை மண்டல வருமான வரித்துறை ஆணையர்

கோவை: கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 27 சதவீதம் அளவிற்கு வருமான வரி அதிகரித்துள்ளதாகக் கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை: கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 27 சதவீதம் அளவிற்கு வருமான வரி அதிகரித்துள்ளதாகக் கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 1860 ஆண்டு ஜூலை 24-ம் தேதி ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியாவில் வருமான வரி செலுத்தும் முறை சர் ஜோம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும், வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் வருமான வரி தினம் என இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. 



இதன் ஒரு பகுதியாக 158 வது வருமான வரி தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், வருமான வரித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார் பேசுகையில், "சுதந்திரத்தின் போது 50 கோடியாக இருந்த வருமான வரி தற்போது லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மேலும், கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 27 சதவீதம் அளவிற்கு வருமான வரி அதிகரித்துள்ளது. இருப்பினும், முழு கணிணிமயமாக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ள வருமான வரி செலுத்தும் முறை குறித்து போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...