கோவை: நீண்ட இழுபறிக்குப்பின் அவினாசி-அத்திக்கடவு கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது ரூ.1850 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு தற்போது காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து ஆண்டுக்கு 2 டி.எம்.சி நீர் எடுத்து, அதனை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முன்னதாக ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ரூ.1850 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வகுக்கப்பட்ட இத்திட்டத்தில் சிறிய மாற்றம் செய்தால், மின்சாரம் வீணாவதைத் தடுக்க முடியும் என்றும், சுத்தமான நீர் கிடைக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து கவுசிகா நதி மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது காளிங்கராயன் வாய்க்காலில் ஆண்டுக்கு 2 டி.எம்.சி நீர் எடுத்து விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் மூலம், நீரை விநியோகிக்க அதிக ஆற்றல் தேவையாகிறது. ஏனெனில், அங்கிருந்து தண்ணீரை கருவலூர் மற்றும் அதற்கு மேல் உள்ள மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே, இதற்கு அதிக மின்னாற்றல் தேவை.
ஆனால், பவானி ஆற்றில் இருந்து 1 டி.எம்.சி நீரையும், எடுக்கும் போது காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து 1 டி.எம்.சி நீரையும் எடுத்து விநியோகம் செய்யும் போது, மேடான பகுதிகளுக்கு, பவானி ஆற்றில் இருந்து கிடக்கும் 1 டி.எம்.சி நீரை விநியோகிக்க முடியும். இதனால் மின்சாரம் சேமிக்கப்படும்.
நீர் முன்னதாகவே எடுக்கப்படும் போது சுத்தமானதாகவும் கிடைக்கும். இரண்டு இடங்களில் நீர் எடுப்பதால், குடிநீர் விநியோகம் எந்த பகுதிக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும்.
இந்த மாற்றம் தொடர்பாக அரசுத் துறைகளுக்கு மனு அளித்தோம். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.