தமிழகம் முழுவதும் 100 சதவீதம் வரை உயர்ந்தது சொத்து வரி: நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கோவை: தமிழகம் முழுவதும் சொத்துவரியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கோவை: தமிழகம் முழுவதும் சொத்துவரியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டுக்கு பிறகு சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்தது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டது. இதையடுத்து சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

உயர்வு

மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புக்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்புக்கள் மற்றும் குடியிருப்புக்கள் அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி விதிக்கப்பட உள்ளது.

பாதிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வால் நடுத்தர, சாதாரண ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...