கோவையில் குளங்கள் மற்றும் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து கோவை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அலுவலர்களுடன் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 8 குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்துக்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும், குளங்களில் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் பொதுப் பணித்துறையுடன் இணைந்து நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும், மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.

மேலும், குளங்களில் நீர்வரத்துக்கான ஆக்கிரமிப்புகளை கண்காணித்து அகற்ற, தண்ணீர் வரத்து சரிசெய்யவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அனைத்து வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்களில் நிறுவிட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

 

நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் தண்ணீர் சேமிப்புக்காக விழிப்புணர்வுக்காக பட விளக்கம் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சேத்துமா வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்தினை கண்காணிக்கவும், தேவையான மணல் மற்றும் சாக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சிக்கு 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளின் பயன்கள் குறித்து தன்னார்வ அமைப்பினர் எடுத்துரைத்தனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...