'மேற்குத் தொடர்ச்சி மலை உயிரினங்கள் சுற்றுச்சூழல் திருவிழா 2018' மாநாடு குறித்து ஆலோசனை

கோவை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் 'மேற்குத் தொடர்ச்சி மலை உயிரினங்கள் சுற்றுச்சூழல் திருவிழா 2018' மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் 'மேற்குத் தொடர்ச்சி மலை உயிரினங்கள் சுற்றுச்சூழல் திருவிழா 2018' மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவையில் வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 'மேற்குத் தொடர்ச்சி மலை உயிரினங்கள் சுற்றுச்சூழல் திருவிழா 2018' மாநாடு 3 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதில், நாடு முழுவதும் உள்ள வனஆர்வலர்கள், வன பாதுகாப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. 

இந்த நிலையில், இந்த மாநாடு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள ஜி.டி. மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. இதில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வன ஆர்வலர்கள் மேற்கு தொடர்ச்சி வன பாதுகாப்பு கமிட்டி (WGCC) உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தங்களது யோசதனைகளையும், திட்டங்களையும் கூறினர். 



இது குறித்து ஓசை அமைப்பின் தலைவரும், டபுள்யூ.ஜி.சி.சி.யின் உறுப்பினருமான கே. காளிதாஸ் கூறியதாவது :- இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் 'மேற்குத் தொடர்ச்சி மலையின் அவசியத்தை உணர்த்துவதாகும். மலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனைப் பாதுகாக்க விதிமுறைகள் வகுப்பது நாட்டை நிர்வகிக்கும் அரசுக்கு முக்கிய கடமையாகும். இந்த மலை நமக்கு தண்ணீர் வழங்குவதுடன், பல்வேறு உயிரினங்களுக்கு வசிப்பிடமாகவும் இருக்கிறது. எனவே, வன பாதுபாதுகாவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளாக அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...