விவசாய நிலங்கள் வழியாக உயர் அலுத்த மின் கோபுரம் : அளவீடு பணிகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அலுத்த மின் கோபுரம் அமைக்க அளவீடு பணிகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அலுத்த மின் கோபுரம் அமைக்க அளவீடு பணிகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது கெங்கநாயக்கன் பாளையம் கிராமம். பல வருடங்களாக 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தாராபுரத்தை அடுத்த புகளூர் கிராமத்திலிருந்து அரசூர் வரை உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கான அரசு பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் மின் வழிப்பாதை கெங்கநாயக்கன் பாளையம் கிராமம் வழியாகச் செல்கிறது.

இக்கிராமத்தில் மின் வழிப்பாதை அமைப்பதற்கான நில அளவீட்டு பணியினை திருப்பூர் சப்கலெக்டர் ஷர்வண்குமார், பல்லடம் வட்டாட்சியர் அருணா மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் அளவீட்டு பணியாளர்கள் மேற்கொண்டனர். தகவல் அறிந்து 20 பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டு வந்து அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட நிர்வாகத்திடமிருந்து முறையான தகவல் எதுவும் வராமல் தங்கள் விளை நிலங்களில் அளவீட்டு பணியில் ஈடுபடக் கூடாதென கூறிய பெண்கள், "எந்த உத்தரவின் பேரில் நீங்கள் அளவீட்டு பணியில் ஈடுபட்டுள்ளீர்கள்?" என அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

தங்கள் வீட்டு குழந்தைகள், கால்நடைகள் பாதிப்படைவது மட்டுமில்லாமல் விவசாயமும் பாழாகி விடும் என அதிகாரிகளுடன் வாக்குவாதம் நடத்தினர்.

தகவலறிந்து பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், சமாதானமடையாத விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பெண்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். தாங்கள் உயிரே போனாலும் விவசாய விளை நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க விடமாட்டோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...