'சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் பிளாஸ்டிக் டப்பாக்களை எடுத்துச் செல்வதை தவிர்த்திடுங்கள்'

கேரளா: சபரிமலையில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில், பிளாஸ்டிக் மீது கேரள உயர்நீதிமன்றம் முழுமையான தடை விதித்ததுடன், பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

கேரளா: சபரிமலையில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில், பிளாஸ்டிக் மீது கேரள உயர்நீதிமன்றம் முழுமையான தடை விதித்ததுடன், பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலையின் புனிதத்தையும், தூய்மையையும் பராமரிக்க அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன்படி, சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்க உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.

இந்நிலையில், சபரிமலை சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சபரிமலையில் பிளாஸ்டிக் மீது முழுமையான தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

அதாவது, சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜையின்போது பக்தர்கள் இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவகை பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தந்திரி பரிந்துரை செய்யும் பொருட்களை மட்டுமே கொண்டு வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சபரிமலையில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டபோதும், பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சபரிமலை சிறப்பு ஆணையர் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை அளித்தார். அதன் அடிப்படையில் இன்று உயர்நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...