லாரி ஸ்ட்ரைக்: நீலகிரி காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

நீலகிரி: நான்காவது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.


நீலகிரி: நான்காவது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை. இதனால், விவசாய விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது தடைபட்டுள்ளது.



லாரிகள் வேலைநிறுத்தத்தையொட்டி சிலர் முன்கூட்டியே மலைக்காய்கறிகளை அறுவடை செய்தனர். தற்போது லாரிகள் ஓடாததால் விவசாயிகள் மலைக்காய்கறிகளை அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டு உள்ளனர். இதன் காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.

மார்க்கெட்டில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, வயநாடு, நிலம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறிய ரக சரக்கு வாகனங்களில் மலைக்காய்கறிகள் ஏற்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. லாரியில் அதிக அளவிலான காய்கறி மூட்டைகளை ஏற்றலாம். சரக்கு வாகனங்களில் குறைந்த அளவிலேயே காய்கறிகளை ஏற்ற முடியும். இருந்தாலும், சரக்கு வாகனங்களில் வெளியிடங்களுக்கு மலைக்காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.



மேலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால், உள்ளூரில் விளையும் கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், டர்னீப் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் வெளியிடங்களுக்கு அனுப்புவது குறைந்துள்ளது.

விலை உயர்வு

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மலைக்காய்கறிகள் மூலம் தினமும் ரூ.40 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெறும். ஆனால், தற்போது ரூ.10 லட்சம் வரை மட்டுமே வியாபாரம் நடந்து உள்ளதுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.30 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



ஒரு கிலோ புரூக்கோலி ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. ஆனால், தற்போது ரூ.30 விலை உயர்ந்து கிலோ ரூ.100–க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.55, கேரட் ரூ. 20-25, பீட்ரூட் ரூ.30-35க்கு விற்பனை ஆகிறது.



தொடர்ந்து காய்கறிகள் விலை உயர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...