கோவையில் நடப்பாண்டில் மட்டும் 1,576 பேர் காசநோயால் பாதிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 1,576 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய காசநோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 1,576 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய காசநோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசநோயை வரும் 2025-ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக காசநோய் கண்டறியும் பிரச்சார வாகனம் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல உள்ளது. இதனை இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இந்த வாகனமானது ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரிடியாக சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு முறையான பரிசோதனை மூலம் கண்டறிய உள்ளது. 



இது குறித்து இணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) கூறியதாவது:- கடந்த 2015-ம் ஆண்டு 3,085 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் காசநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 87% வரை குணமடைந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு இதுவரை கோவை மாவட்டத்தில் 1,576 காசநோயாளிகள் நடப்பாண்டில் கண்டறியப்பட்டுள்ளது.



இந்த வாகனம் தமிழக முதலமைச்சரால் கடந்த மார்ச்14-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரி எடுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தனியார் மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளும் போது ரூ. 2,000 வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் 240 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இரண்டு பரிசோதனை மாதிரிகள் ஒன்று கோவையிலும், மற்றொன்று சென்னையில் உள்ள இண்டர் மீடியேட் ஆய்வகம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஊக்கத் தொகையுடன் சிகிச்சை அளிக்கப்படும், என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...