கோவை: நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மற்றும் சலுகைகளை உடனடியாக வழங்கிடக் கோரி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பகல் இரவு நேரக் காவலர்கள் மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து பொது தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஜி.பி., மாரிமுத்து கூறியதாவது :- மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும். காவலர்களுக்கும் மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள். பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. இதைப்பற்றி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

உடனடியாக அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை மற்றும் பண்டிகைக்கால விடுமுறை அளிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்துள்ளோம். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட துணை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், இந்தப் பிரச்சனைகளை மாநகராட்சி சரிசெய்ய தவறும்பட்சத்தில் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார்.