கோவை: தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாற்றுத்திறனாளி, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுந்தராபுரம் கருப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவரது கணவர் இறந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார்.
அதே பகுதியில் வசிக்கும் லதா என்பவர் தனலட்சுமியை காரணமே இல்லாமல் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை லதா வீட்டில் வைத்திருந்த பணத்தை, திருடி விட்டதாகக் கூறி தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டுகிறார் தனலட்சுமி.
இந்த நிலையில், லதா மீது புகார் கொடுக்க இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மேலும், அலுவலக வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

பின்னர், தனக்கு யாரும் இல்லாத காரணத்தால் பாபு மற்றும் அவரது மனைவி லதா இருவரிடமிருந்தும் தனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.