திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கருப்பு கொடியேற்றியும், கடைகளை அடைத்தும் இன்று போராட்டம் நடத்தினர்.

15 வேலம்பாளையம் பகுதி அமர்ஜோதி கார்டனில் கடந்த வாரம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதியினர் கடைகளை அடைத்தும், கருப்பு கொடிகளை கட்டியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டாஸ்மாக் அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் கடையை அடைத்துவிடுவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.