கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்.

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்.

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. சோலையாறு அணையில் 16 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 162.87 (160) அடியாக உள்ளது. விநாடிக்கு 3,683.71 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, 3,581.71 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் : 70 (72அடி) அடியாக உள்ளது. தொடர் மழையினால் அணைக்கு 4,279 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1,007 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, ஆழியாறு அணை, அதன் மொத்தக் கொள்ளளவான 120 அடியில் 116.60 அடியளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்வரத்து 1,121 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 919 கனஅடியாக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அணையான திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 50.98 (60அடி) அடியாக உள்ளது. நீர்வரத்து 976 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர்வெளியேற்றம் 29 கனஅடியாகவும் உள்ளது. அமராவதி அணையின் நீர்மட்டம் 87.34 (90 அடி) அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து 1,625 கனஅடியாக இருக்கிறது. நீர்வெளியேற்றம் 1,284 கனஅடியாக உள்ளது.

சிறுவாணி அணையின் மொத்த நீர்மட்டம் 55.00 கனஅடி. தற்போது, 49.53 அடி நீர் உள்ளது. 100.00 அடி நீர் மட்டம் கொண்ட பில்லூர் அணையில் தற்போது 94.00 கனஅடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,696 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியாறு அணையில் தற்போது 115.50 அடி நீர் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,800 கனஅடியாக உள்ளது.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையின் அளவு:

  • வால்பாறை - 12 மி.மீ.
  • அப்பர் நீராறு - 19 மி.மீ.
  • லோயர் நீராறு - 18 மி.மீ.
  • காடம்பாறை - 3 மி.மீ.
  • பொள்ளாச்சி - 16 மி.மீ.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...