பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் காய்கறிகளை இலவசமாக ஏற்றிச் செல்லலாம் : கோவை அரசு போக்குவரத்து கழகம்

கோவை : லாரி உரிமையாளர்களின் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளுக்குத் தொந்தரவு இல்லாமல் காய்கறிகளை இலவசமாக ஏற்றிச் செல்லலாம் என கோவை அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கோவை : லாரி உரிமையாளர்களின் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளுக்குத் தொந்தரவு இல்லாமல் காய்கறிகளை இலவசமாக ஏற்றிச் செல்லலாம் என கோவை அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சுங்கவரிக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக, விவசாயப் பொருட்களை விற்பனைக்கான வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான விளை பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. 

இந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயப் பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னையில் நேற்று இரவு முதலே விவசாயிகள் காய்கறிகளை பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். இந்த நிலையில், கோவையில் இன்று முதல் காய்கறிகளை இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்து கழகம், கோவையின் பொதுமேலாளர் கோவிந்தாஜ் நம்மிடம் கூறுகையில், "பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் இலவசமாகக் காய்கறிகளை மட்டும் அரசுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லலாம். எக்ஸ்பிரஸ், சாதாரணப் பேருந்து, புறநகர் பேருந்து என அனைத்து வகை பேருந்துகளிலும் ஏற்றிச் செல்லலாம். காய்கறி மூட்டைகளை சீட்டின் மேல் ஏற்றக்கூடாது," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...