4-வது நாளாக தொடரும் லாரிகள் ஸ்டிரைக் ; ரூ. 4,000 கோடி வர்த்தகம் பாதிப்பு

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருவதால், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 4,000 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருவதால், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 4,000 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்தக் கோரியும் கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட், ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான காய்கறிகள் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.



விவசாயிகள் தங்கள் பொருட்களை வெளியே அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், காய்கறிகள் அழுகும் நிலை உருவாகியுள்ளது. அதே சமயம் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், தொழில் நகரமான கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகளும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் பலர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என சிறு, குறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, 4-வது நாளாக நீடிக்கும் லாரி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை வர்த்தக தேக்கம் அடைந்துள்ளதாகவும், பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...