புறவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முன்கூட்டியே இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் புற வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீட்டினை முன் கூட்டியே கொடுத்து விட்டு பணியை தொடங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் புற வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீட்டினை முன் கூட்டியே கொடுத்து விட்டு பணியை தொடங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் புற வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புறவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், மேட்டுப்பாளையத்தில் புற வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீட்டினை முன் கூட்டியே கொடுத்து விட்டு பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், மேட்டுப்பாளையத்தில் உள்ள குட்டையூர் முதல் ஓடந்துறை வரை சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிற்கு புற வழிச்சாலை அமைக்கப்படும். இந்த சாலைப் பணிக்காக இப்பாதையில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதனை அறிவித்து பல ஆண்டுகளாகியும் திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால், புறவழிச்சாலை அமையும் இடத்தில் உள்ள விவசாய நிலங்களை அடகு வைத்து கடன் பெறவோ அல்லது அவசர தேவைக்காக விற்கவோ இயலாமல் விவசாயிகள் தவித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 



நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குறுகிப்போன சாலைகளை விரிவாக்காமல் விட்ட காரணத்தினாலேயே புறவழிச்சாலை திட்டங்கள் அவசியமாகிறது. நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு கைடுலைன் மதிப்பைக் கணக்கிடாமல் சந்தை விலையைக் கணக்கில் கொண்டு இழப்பீடுகள் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்களும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...