திருப்பூரில் செக் மோசடி வழக்கில் பனியன் நிறுவன மேலாளர் உட்பட இருவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன காசோலையில் போலி கையெழுத்து போட்டு ரூ. 1.50 கோடி மோசடி செய்த மேலாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன காசோலையில் போலி கையெழுத்து போட்டு ரூ. 1.50 கோடி மோசடி செய்த மேலாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் அவினாசி சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் கிருபாசங்கர் என்பவர் மேலாளராக பணி புரிந்து வருகிறார். 

நிறுவனத்தின் வங்கி கணக்கு திருப்பூர் குமரன் சாலையிலுள்ள கரூர் வைஸ்யா வங்கியிலுள்ளது. சமீபத்தில் பழனிசாமி கையெழுத்து போட்ட காசோலை வங்கிக்குச் சென்றுள்ளது. கையெழுத்து வேறுபாடாக இருக்கவே வங்கியிலிருந்து பழனிசாமியை தொடர்பு கொண்ட போது, தான் எதுவும் காசோலை வழங்கவில்லை என கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, பனியன் நிறுவன கணக்கை தணிக்கை செய்ததில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ. 1.50 கோடி அளவில் மோசடி நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பனியன் நிறுவனத்தின் மேலாளர் கிருபாசங்கரிடம் விசாரித்த போது, கடந்த 4 ஆண்டுகளாக பழனிசாமியின் கையெழுத்திட்டு பணத்தை எடுத்து, தனது தாய், சகோதரி மற்றும் மைத்துனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் வங்கி கணக்கில் அனுப்பி மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் பழனிசாமி புகார் அளித்ததின் பேரில் கிருபாசங்கர்(27), கிருஷ்ணராஜ்(52) ஆகிய இருவரும் கைது செய்து செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இதில் வங்கி ஊழியர்களுக்கு ஏதும் தொடர்புண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...