கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை அமைச்சர் வேலுமணி இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

கோவையின் பல்வேறு பகுதிகள் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழை காரணமாக குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக் கோவையில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், நிரம்பி வழியும் குளங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார். குனியமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களான புட்டுவிக்கி போன்ற குளங்களை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

குளங்களை பார்வையிட அமைச்சர் சென்ற விதம் மக்களை ஆச்சரியப்பட வைத்தது. இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச்செல்ல, அவரது பின்னால் அமர்ந்தபடி, பயணித்த அமைச்சரை பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர்.
இது தொடர்பாக, அவரது பேஸ்புக் பக்கத்தில், கோவையில் உள்ள குளங்கள் நிரம்பி வழியும் நிலையில், குளக்கரையின் உயரத்தை உயர்த்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எங்க ஹெல்மெட்?
அமைச்சர் இப்படி பயணம் செய்ய, அவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று மீண்டுமொரு முறை நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்த சூழலில், தமிழக அமைச்சர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்த விவகாரம் சர்ச்சையை உண்டாகியுள்ளது.