நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளும், கழுகு போன்ற அரிய வகை பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் வன தூய்மையாளன் என அழைக்கப்படும் பிணந்தின்னி கழுகுகள் மாயார் ஆற்று படுகை மற்றும் தெங்குமரஹாடா பகுதிகளை சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாக இருந்தன. காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் இந்த வகை கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அழிவின் பட்டியலில் இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிணந்தின்னி கழுகுகள் அதிகமாக காணப்படும் கோத்தகிரி, கோடநாடு காட்சி முனை பகுதியில் பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்க வலியுறுத்தி, அருளகம் டிட்டா அமைப்பு மற்றும் பாறு கழுகுகள் பாதுகாப்பிற்கான தென்னிந்திய கூட்டமைப்பு சார்பில் இன்று விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பதாகையை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற நீலகிரி மாவட்ட தெற்கு வனக்கோட்ட அலுவலர் பத்ரசாமி திறந்து வைத்தார்.