மேட்டுப்பாளையம் அருகே வெள்ளத்தில் மூழ்கும் உயர்மட்ட பாலம் : போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் தவிக்கும் கிராம மக்கள்

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள லிங்காபுரம் பகுதியில் காந்தவயல், காந்தையூர், உளியூர், ஆளூர் என நான்கு மலையடிவார கிராமங்கள் உள்ளன.

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள லிங்காபுரம் பகுதியில் காந்தவயல், காந்தையூர், உளியூர், ஆளூர் என நான்கு மலையடிவார கிராமங்கள் உள்ளன. 

இதில் லிங்காபுரத்திற்கும் காந்தவயலுக்கும் இடையே காந்தையாறு என்னும் காட்டாறு கடக்கிறது. நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரி என்னும் பகுதியில் பெய்யும் மழை நீர் இந்த காந்தயாற்று வழியாக பவனியாற்றில் கலக்கின்றது. 

இந்த காட்டாற்றை பரிசல் மூலம் கடந்தே இந்த நான்கு கிராம மக்களும் நகரப்பகுதிகளுக்கு வர இயலும் என்ற நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு காந்தையாற்றின் குறுக்கே பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் ரூபாய் நாற்பது லட்சம் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. 

ஆற்றின் கீழ் மட்டத்தில் இருந்து இருபதடி உயரத்திற்குப் பாலம் கட்டப்பட்ட போதே உள்ளூர் மக்கள், பாலத்தின் உயரத்தை குறைந்தபட்சம் 32 அடியாக உயர்த்திக் கட்டினால் மட்டுமே வெள்ளப் பெருக்கு காலத்திலும் பாலம் நீரில் மூழ்காது என தெரிவித்தனர். 

ஆனால், அனுபவத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கிராம மக்களின் கருத்து ஏற்கப்படாமல் ஏற்கனவே திட்டமிட்டபடி 20 அடி உயரத்திலேயே கட்டப்பட்டது. இதனால் இப்பாலம் கட்டப்பட்டது முதல் பல முறை நீருக்கடியில் மூழ்குவதும் நீர் வடிந்த பின்னர் வெளி வருவதுமாக உள்ளது.

குறிப்பாக இப்பகுதி பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் அணையின் நீர்மட்டம் நூறு அடியைக் கடந்தால் இப்பாலம் மூழ்கத் தொடங்கிவிடும். இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நூறு அடியை கடந்து விட்டதால் இப்பாலம் மீண்டும் மூழ்கத் துவங்கிவிட்டது.

பாலத்தைத் தொட்டபடி ஆற்று நீர் செல்வதால் இன்று முதல் இதன் மீது பயணிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீரின் மேல் மிதக்கும் நிலையில் உள்ள இப்பாலத்தின் மீது நின்று கொண்டு ஆபத்தை உணராமல் செல்பி எடுத்துக்கொள்ளும் இளைஞர்களையும் வேடிக்கை பார்க்க வரும் மக்களையும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.



நேற்று மாலை முதல் இப்பகுதிக்குச் செல்லும் வனத்துறை சோதனை சாவடியும் மூடப்பட்டது. நீருக்கடியில் மூழ்கும் இப்பாலம் இன்னும் மூன்று மாத காலத்திற்கும் மேல் நீருக்கடியிலேயே இருக்கும் என்பதால் பாதிக்கப்படும் கிராம மக்கள் மீண்டும் பழையபடி பரிசல் பயணத்திற்கு தயாராகி விட்டனர்.



பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள் போன்றோர் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். காட்டாற்றில் பரிசல் பயணம் ஆபத்தானது என்ற போதும் தங்களுக்கு வேறு வழியில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.

அடிக்கடி நீருக்குள் மூழ்கிவிடுவதால் காத்தையாற்று பாலம் சேதமடைந்து விட்டது என்பதுடன், இனியாவது இதனை புதுப்பித்து தற்போது உள்ளதைக் காட்டிலும் பன்னிரண்டு அடி உயர்த்திக் கட்டுவது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...