நீலகிரி: எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து உதகையில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. கழக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமை கழக நிர்வாகிகள் அழகாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்ட தே.மு.தி.க.,வை பலப்படுத்தும் நடவடிக்கை குறித்து நகரங்கள், ஒன்றியம் பேரூராட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பிறகு, எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் பற்றியும், தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு பற்றியும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.