கோவை: கொடிசியா அரங்கில் கோயமுத்தூர் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

கோவை கொடிசியா அரங்கில் நான்காவது கோயமுத்தூர் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வருகின்ற 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 175 பதிப்பகங்கள் பங்கேற்றுள்ள நிலையில், 275 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு தலைப்புகளில் நாவல்கள், கவிதைகள், இலக்கியங்கள், கதைகள், அரசியல், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட லடச்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை பள்ளிக்கல்வி துறை செயலாளர் உதய சந்திரன் தொடங்கி வைத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்த புத்தக கண்காட்சி குழந்தைகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. குழந்தைகள் மூலம் பெற்றோர்களும் இந்த கண்காட்சிக்கு வருவார்கள் என நம்புகிறோம்.
புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவது மூலம் அடுத்த தலைமுறைக்கான முதிர்ச்சியான சமூகத்தை உருவாக்க முடியும். மேற்கு மண்டல மக்கள் இந்த புத்தக கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." என்றார்.

புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில், "எழுத்தாளர்களின் புதிய நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும், வாசகர்களை சந்திக்கவும் புத்தகக் கண்காட்சிகள் உதவுகிறது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய கடமை உள்ளது. புத்தக வாசிப்பு என்பது ஆளுமையை மாற்றக்கூடியது. ஆகவே அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." என்றார்.
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களுக்கு ஏற்ப பத்து சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சலுகை அடிப்படையில் தள்ளுபடி தரப்படுகிறது. பாடங்கள் மட்டுமின்றி மற்ற புத்தகங்களை ஒருசேர வாங்கவும்,குறைந்த விலையில் வாங்கவும் புத்தக கண்காட்சி உதவிக்கரமாக இருப்பதாகவும், மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதாகவும் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும். அறிவை விரிவு செய்யும் வகையில் அறிவியல் கதைகள், படங்களுடன் கூடிய சமூக நெறி கதைகள், காமிக்ஸ்,உள்ளிட்ட புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகுமென எதிர்பார்ப்பதாக பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மை காலமாக குழந்தைகளிடம் பாடப்புத்தகங்களை தவிர்த்த பற்ற புத்தகங்கள் வாசிப்பு பழக்கம் அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் விரும்பிப் படிக்கும் ஏராளமான புத்தகங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு 60 ஆயிரம் பேர் புத்தக.கண்காட்சிக்கு வருகை தந்ததாகவும். ஒன்றரை கோடிக்கு வணிகம் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு ஒரு லட்சம் பேர் வரை வருகை தருவார்கள் எனவும் இரண்டரை கோடி வரை வணிகம் நடைபெறுமென எதிர்பார்ப்பதாகப் புத்தக கண்காட்சியின் தலைவர் சவுந்திரராசன் தெரிவித்தார்.