கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி பயிற்சியாளருக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நரசீபுரம் பகுதியில் உள்ள கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது போலி பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர், லோகேஸ்வரி என்ற மாணவியை இரண்டாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
இதில் எதிர்பாராத விதமாக மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு ஆலாந்துறை போலீசார், போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆறுமுகம், போலியான ஆவணங்களைக் கொடுத்து நாடு முழுவதும் 1,467 கல்வி நிலையங்களில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீசார் 7 நாட்கள் அனுமதி கேட்டிருந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்கள் மட்டும் விசாரணைக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இன்று நீதிமன்றத்தில் ஆறுமுகம் ஆஜர்படுத்தப்பட்டர். அவரை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க 6-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.